ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் 8 மாத கர்ப்பிணி இந்திய பெண் மற்றும் கருவில் இருந்த குழந்தை பலி

ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் ஹார்ன்ஸ்பை பகுதியில் ஏற்பட்ட துயரமான சாலை விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி மன்விதா தரேஷ்வர் மற்றும் கருவில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளனர். மன்விதா தனது கணவர் மற்றும் 3 வயது மகனுடன் அப்பகுதியில் வசித்து வந்தார்.

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் 8 மாத கர்ப்பிணி இந்திய பெண் மற்றும் கருவில் இருந்த குழந்தை பலி
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் ஹார்ன்ஸ்பை பகுதியில் ஏற்பட்ட துயரமான சாலை விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி மன்விதா தரேஷ்வர் மற்றும் கருவில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளனர். மன்விதா தனது கணவர் மற்றும் 3 வயது மகனுடன் அப்பகுதியில் வசித்து வந்தார்.

நேற்று, மன்விதா தனது குடும்பத்துடன் சாலையில் நடந்து சென்றபோது, கார் நிறுத்துமிட நுழைவாயிலை கடக்கும்போது ஒரு கார் அவர்களது முன் வந்தது. அந்த வாகனம் மீது பின்னால் வந்த சொகுசு கார் வேகமாக மோதியதால், முன்னிருந்த கார் தள்ளிச் சென்று மன்விதாவை பலத்தடியாக மோதியது. தாக்கம் மிகுந்ததால் அவர் கடுமையாக காயமடைந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். எனினும், அங்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் மன்விதாவும், கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்தனர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, விபத்தில் தொடர்புடைய இரண்டு வாகன ஓட்டிகளிடமிருந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபத்தான முறையில் ஓட்டியதால் மரணம் ஏற்படுத்துதல், கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்துதல் மற்றும் கருவிழப்பிற்கு காரணமாக செயல்பட்டல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT