அமெரிக்காவை விட சீனாவுக்கு அதிக அளவில் பயணிக்கும் சுவிஸ் பயணிகள்: ஜெனீவா விமான நிலையம் தகவல்

ஜெனீவா விமான நிலைய வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவை விடச் சீனாவுக்குப் பயணிக்கும் சுவிஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விமான நிலையத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவை விட சீனாவுக்கு அதிக அளவில் பயணிக்கும் சுவிஸ் பயணிகள்: ஜெனீவா விமான நிலையம் தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜெனீவா விமான நிலைய வரலாற்றில் முதன்முறையாக, சுவிட்சர்லாந்து நாட்டவர்கள் அமெரிக்காவை விடச் சீனாவுக்கு அதிக அளவில் விமானப் பயணம் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அண்மைய மாதங்களில் சுவிஸ் பிரஜைகளின் பயணப் போக்கில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை ஜெனீவா விமான நிலையம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த ஜூலை மாதத்தில் சுவிட்சர்லாந்து மற்றும் சீனாவுக்கு இடையே 25,900 சுவிஸ் பயணிகள் பயணம் செய்துள்ள நிலையில், அதே காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான பயணிகளின் எண்ணிக்கை 23,100 ஆகப் பதிவாகியுள்ளது.

இதேபோல் ஓகஸ்ட் மாதத்திலும் சீனாவுக்கான பயணிகளின் எண்ணிக்கை 29,300 ஆக உயர்ந்த வேளையில், அமெரிக்காவுக்குப் பயணித்தவர்களின் எண்ணிக்கை 25,300 ஆகக் காணப்பட்டது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் சீனாவுக்குச் சென்ற பயணிகளை விட அமெரிக்காவுக்குச் சென்ற சுவிஸ் பயணிகளின் எண்ணிக்கை இருமடங்காக இருந்தது என்று ஜெனீவா விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன் மூலம் வழக்கமான பயணத் தேர்வுகளைத் தாண்டி தற்போது சுவிஸ் பயணிகள் மத்தியில் சீனாவுக்கான பயண நாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது உறுதியாகியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT