147 ஆண்டு கால டெஸ்ட் வரலாறு - உலக சாதனை படைத்த இலங்கை வீரர்

இந்திய வீரர் பல்விந்தர் சந்து 71 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள மிலன் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

147 ஆண்டு கால டெஸ்ட் வரலாறு - உலக சாதனை படைத்த இலங்கை வீரர்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

முதலாவது டெஸ்ட் மான்செஸ்டரில் நேற்று தொடங்கியதுடன், இலங்கை அணியில் அறிமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் மிலன் ரத்னநாயகே இடம் பிடித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணியிள் கருணாரத்ன (2 ரன்), நிஷான் மதுஷ்க (4 ரன்), மேத்யூஸ் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

குசல் மென்டிஸ் (24 ரன்), சந்திமால் (17 ரன்) எடுத்த நிலையில், மிடில் வரிசையில் கேப்டன் தனஞ்ஜெய டி சில்வா நெருக்கடியை சமாளித்து 74 ரன்கள் (84 பந்து, 8 பவுண்டரி) எடுத்தார்.

இதயும் படிங்க: கமிந்து மென்டிஸ் அதிரடி சதம்.. இங்கிலாந்து வெற்றி பெற 205 ரன்கள் இலக்கு

ADVERTISEMENT
ADVERTISEMENT

பின்வரிசையில் புதுமுக வீரர் மிலன் ரத்நாயக அரைசதம் விளாசி அணியின் ஸ்கோர் 200-ஐ கடக்க வைத்ததுடன், 72 ரன்களில் ஆட்டமிழந்தார். 

முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 74 ஓவர்களில் 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட்டும், அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த இன்னிங்சில் 9-வது வரிசையில் களமிறங்கிய இலங்கை அறிமுக வீரர் மிலன் ரத்நாயக 72 ரன்கள் அடித்ததன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் 9-வது வரிசையில் அறிமுக வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை மிலன் ரத்நாயகே படைத்துள்ளார். 

இதற்கு முன்னர் இந்திய வீரர் பல்விந்தர் சந்து 71 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள மிலன் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT