நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் கனமழை எச்சரிக்கை

இன்று பிற்பகல் முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு. சில இடங்களில் கனமழை மற்றும் அதிகாலை பனிமூட்டம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் கனமழை எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் தெற்கு மாகாணங்களுடன் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான கனமழை பதிவாகும் வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்ட நிலை உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT