அலைபேசியால் உயிரிழந்த பாடசாலை மாணவன்

ரயிலில் மோதி கண்டி முல்கம்பொல மேம்பாலத்துக்கு அருகில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அலைபேசியால் உயிரிழந்த பாடசாலை மாணவன்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ரயிலில் மோதி கண்டி முல்கம்பொல மேம்பாலத்துக்கு அருகில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் நேற்று(26) குறித்த மாணவன் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கண்டியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விசாரணையில், மாணவன் தனது கைப்பேசியில் பேசிக் கொண்டு பாதசாரிகள் பயணிக்கும் மேம்பாலத்தில் பயணிக்காமல் ரயில் தண்டவாளம் ஊடாக பயணிக்கும் போது ரயிலில் மோதுண்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT