செக் குடியரசு பாடசாலையில் துப்பாக்கிச்சூடு; 15 பேர் பலி

செக் குடியரசில் தலைநகர் பிரேக் அருகே பலாச் சதுக்கத்தில் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கூடம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 

செக் குடியரசு பாடசாலையில் துப்பாக்கிச்சூடு; 15 பேர் பலி
ADVERTISEMENT
ADVERTISEMENT

செக் குடியரசில் தலைநகர் பிரேக் அருகே பலாச் சதுக்கத்தில் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கூடம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 

இங்கு நேற்று மர்ம நபர் ஒருவர் நவீன துப்பாக்கியுடன் பள்ளியில் நுழைந்து கண்ணில் பட்டவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ஏராளமானோர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துமனைகளில் அனுமதித்தனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவரை பொலிஸார் சுட்டுக்கொன்றனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

உயிரிழந்தவர்கள் மாணவர்களா? அல்லது பொதுமக்களா? என்பது குறித்தும் தகவல் தெரிவிக்கப்படவில்லை, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT