நயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் டும்.. டும்.. டும்!

தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். 

நயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் டும்.. டும்.. டும்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 

இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். 

சமீபத்தில் நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படத்தில், நயன்தாரா நெற்றியில் குங்குமத்துடன் இருப்பதை போன்று புகைப்படம் வெளியாகி இருவரும் திருமணம் செய்துக்கொண்டதாக பேசப்பட்டது. 

இந்நிலையில், தற்போது அவர்களின் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இவர்களின் திருமணம் நடைப்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT