மின் கட்டண திருத்தம் குறித்து வெள்ளிக்கிழமை இறுதி முடிவு

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்த யோசனைகள் குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் கட்டண திருத்தம் குறித்து வெள்ளிக்கிழமை இறுதி முடிவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்த யோசனைகள் குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழு எதிர்வரும் 30ஆம் திகதி கூடி அது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் என அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை குறைக்க மின்சார சபை முன்மொழிந்துள்ளதுடன், அது தொடர்பான முன்மொழிவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு பயன்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இப்பணிகள் நேற்று (27) நிறைவடைந்துள்ளதுடன், கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் தற்போது ஆணைக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT