இரண்டு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த இருவரை ஹமாஸ் விடுவித்ததை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது

இரண்டு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்காவைச் சேர்ந்த இருவரை ஹமாஸ் விடுவித்ததை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது

ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். அதோடு பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் சிலரை கொலை செய்ததாக இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இருவரை நேற்று விடுதலை செய்துள்ளனர். இந்த தகவலை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த தாய் மற்றும் இளம் வயது பெண் எனத் தெரியவந்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இருவரிடமும் ஜோ பைடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். அப்போது, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்ய கத்தார், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்து, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT