வயோதிப மாமியாரை தாக்கிய மருமகள் கைது! யாழில் சம்பவம்

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் கவனம் செலுத்திய நிலையில் பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

வயோதிப மாமியாரை தாக்கிய மருமகள் கைது! யாழில் சம்பவம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

யாழ்ப்பாணம் - கொடிகாமத்தில் வயோதிபத் தாய் ஒருவரை பிரம்பால் தாக்கிய பெண் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொடிகாமம், மந்துவில் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் வயோதிபப் பெண் ஒருவர் மீது மேற்படி பெண்ணின் மருமகளால் தாக்குதல் நடத்தப்பட்டது என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் கவனம் செலுத்திய நிலையில் பொலிஸாருக்குத்
தகவல் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த கொடிகாமம் பொலிஸார், தாக்குதல் நடத்திய பெண்ணைக் கைது செய்து பொலிஸ் நிலையத்தில்
தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைகளுக்குப் பின்னர் மேற்படி நபரை, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT