அதிரடியாக குறையும் கோழி இறைச்சியின் விலை... முக்கிய அறிவித்தல்

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் கால்நடை உற்பத்தியாளர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

அதிரடியாக குறையும் கோழி இறைச்சியின் விலை... முக்கிய அறிவித்தல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் கால்நடை உற்பத்தியாளர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது 1,250 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

'வர்த்தக அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின் சில இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம். தற்போது நாட்டில் இறைச்சி தட்டுப்பாடு இல்லை. 

சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் அதிகபட்ச திறனில் உற்பத்தி செய்கின்றனர். அதன்படி எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடு ஏற்படாது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

டிசெம்பர் மாதத்திற்குள் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என நம்புகிறோம். அதன்படி விலை மேலும் குறையும்.

இலங்கைக்கு சோளத்தை கொண்டுவந்தால் முழுமையாக உணவுக்கு பயன்படுத்தலாம். அப்போது உற்பத்தி செலவை குறைக்கலாம்” என்றார்.

 1,250 ரூபாய்க்கு தற்போது கோழியிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கூறினாலும் சந்தையில் 1400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இது குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT