இந்தியா - இங்கிலாந்து போட்டி மழையால் தாமதம்; இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பு!

2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

இந்தியா - இங்கிலாந்து போட்டி மழையால் தாமதம்; இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

9ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த ஆட்டம் கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு நடைபெற இருந்தது.

இந்த நிலையில் கயானாவில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆட்டத்திற்கு ரிசர்வ் நாள் கிடையாது என்பதால், ஆட்டத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் சூப்பர் 8 சுற்று புள்ளி பட்டியல் அடிப்படையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT