ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, அமெரிக்காவின் புதிய தடைகள் குறித்த அச்சுறுத்தல், அந்த நாட்டின் விரக்தியின் வெளிப்பாடாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு பணிய மறுத்ததை ஈரான் தனது வெற்றியாகக் கருதுகிறது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போரில் வெற்றி பெற்ற பின்னர் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் பிரதேசமாக அறிவிக்கப்போவதாக கூறியுள்ளார். இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
"நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலுக்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், நான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை" என்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த டிரம்ப், "நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம். ஒரு கட்டத்தில் இதை மேலும் தாங்க முடியாது என்று அவர்களே கூறும் நிலை ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் அதிபர் மசூத் பேஸெஷ்கியான், அமெரிக்காவுடனான இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரலாற்றுச் சாதனை எனப் பாராட்டியுள்ளார். பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைதி கிடைக்கும் என அவர் வலியுறுத்தினார்.
IRNA, அமெரிக்கா – ஈரான் இடையிலான உத்தேச உடன்பாட்டின் 07 முக்கிய அம்சங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதில் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ஈரானிய அரசாங்கத்திற்கும், அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் நடவடிக்கைகள் நிறைவடைந்ததாக மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய தாக்குதல் நடந்தால் பேரழிவு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சிறிய குழுவுடன் வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்கிறார். அமெரிக்காவுடனான நேரடிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முக்கியப் படியாக இந்தப் பயணம் கருதப்படுகிறது.
உலக எரிசக்தி விநியோகத்தில் முக்கிய இடம் வகிக்கும் இந்த நீரிணை முடங்கியதால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அமெரிக்க கடற்படை முற்றுகை அமலுக்கு வந்த பின்னரும், ஹோர்முஸ் ஜலசந்தியை சில கப்பல்கள் கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூன் மாதத்துக்குப்பிறகு ஈரான் அவற்றை தொடவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், டிரம்பின் இந்த அறிவிப்புக்கு ஈரான் எந்தவிதமான பதிலையும் தரவில்லை.
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், தற்காப்பு மற்றும் தாக்குதல் திறனை அதிகரிக்க மேற்காசியாவிற்கு மேலும் 10,000 அமெரிக்க வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.
ஈரான் தங்களை அழித்துவிடுவார்கள் என்ற பயத்தில் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானில் இரு நாடுகளும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.