கொழும்பில் ஒருவர் கொலை; வெலிமடை இளைஞன் கைது

சம்பவம் தொடர்பில் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் ஒருவர் கொலை; வெலிமடை இளைஞன் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு, மருதானை  தேவநம்பியதிஸ்ஸ மாவத்தையில் நபரொருவர்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 44 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன்,  கொலை செய்யப்பட்டவருக்கும் இளைஞன் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT