18 ஆண்டுகளுக்குப் பிறகு மகம் நட்சத்திரத்தில் கேது: இந்த 3 ராசிகளுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்!

சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கேது பகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ள நிலையில், குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வச் சேர்க்கையும் யோகமும் உண்டாகப்போகிறது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு மகம் நட்சத்திரத்தில் கேது: இந்த 3 ராசிகளுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜோதிட ரீதியாக 'ஞான காரகன்' என்று அழைக்கப்படும் கேது பகவான், பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் அமரும் இடத்தைப் பொறுத்தே சுப அல்லது அசுப பலன்களை வழங்குகிறார். அந்த வகையில், வரும் மார்ச் 29-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை கேது பகவான் மகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். 

சுமார் 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த அரிய வானியல் நிகழ்வு, தலைமைப் பண்பு மற்றும் தனிப்பட்ட அடையாளங்களில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் வல்லமை கொண்டது. குறிப்பாக, அதிகார மையங்களில் இருப்பவர்களுக்கும், தங்களின் தனித்திறமையை நிரூபிக்கக் காத்திருப்பவர்களுக்கும் இந்த காலக்கட்டம் ஒரு பொற்காலமாக அமையவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கடக ராசி

கடக ராசியைப் பொறுத்தவரை, கேதுவின் இந்த நகர்வு அவர்களின் இரண்டாவது வீடான தன ஸ்தானத்தில் நிகழ்கிறது. இதனால் பொருளாதார ரீதியாக நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் எடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு லாபம் பெருகும் என்பதால், வங்கி சேமிப்பு கணிசமாக உயரும் சூழல் உருவாகும். 

வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. குடும்ப உறவுகளில் நிலவி வந்த கசப்புகள் நீங்கி, வாழ்க்கைத்துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும் ஒரு மகிழ்ச்சியான காலகட்டமாக இது அமையும்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் அவர்களின் எட்டாவது வீட்டில் நிகழ்ந்தாலும், அது எதிர்பாராத யோகங்களை வாரி வழங்கப்போகிறது. பணியிடத்தில் உங்களின் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதுடன், மேலதிகாரிகளின் பாராட்டும் வந்து சேரும். நிதி நிலையில் ஒரு நிலையான முன்னேற்றம் ஏற்படுவதால், கடன் சுமைகள் குறைந்து நிம்மதி கிட்டும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் கைகூடி வரும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

மகர ராசி

மகர ராசியினருக்கு ஏழாவது வீட்டில் கேதுவின் பிரவேசம் அமைவதால், கூட்டுத் தொழிலில் பெரும் வெற்றி உண்டாகும். கஜகேசரி யோகத்தின் தாக்கம் இருப்பதால் புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கும் யோகம் இவர்களுக்கு தேடி வரும்.

இந்தக் காலக்கட்டத்தில் முதலீடுகள் செய்பவர்கள் நிதானத்துடனும், முறையான ஆலோசனையுடனும் செயல்படுவது நீண்ட கால அடிப்படையில் பெரும் லாபத்தைத் தரும்.

கேதுவின் இந்த நட்சத்திர சஞ்சாரம் ஒரு சில ராசிகளுக்குப் பெரும் பொருட்சேர்க்கையைத் தந்தாலும், மற்ற ராசியினரும் தங்களின் உழைப்பால் முன்னேற்றம் காண முடியும். ஆன்மீக ரீதியான வழிபாடுகள் மற்றும் குலதெய்வப் பிரார்த்தனை இந்த மாற்றங்களை இன்னும் சாதகமாக மாற்ற உதவும் என்பது ஜோதிட வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT