விபத்தில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
விபத்தில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (03) மாலை சண்டிலிப்பாயிலிருந்து இளவாய் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வலப்புறம் திரும்பும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் சாரதி தனது மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து சங்கனி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சில்லாலை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சடலம் சங்கானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Click for more latest வடக்கு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -