கனடாவில் தற்காலிக விசா கட்டுப்பாடுகள் தீவிரம் – கடுமையாக்கப்பட்ட வெளியேறும் நடைமுறை

தற்காலிக விசாவில் கனடாவிற்கு வரும் நபர்கள் காலாவதி ஆன பின்னர் வெளியேறுகிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கனடாவில் தற்காலிக விசா கட்டுப்பாடுகள் தீவிரம் – கடுமையாக்கப்பட்ட வெளியேறும் நடைமுறை
ADVERTISEMENT
ADVERTISEMENT

கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தருபவர்கள், விசா காலம் முடிந்தவுடன் கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற விதிமுறைகள் மேலும் வலுப்படுத்தப்பட உள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார்.

தற்காலிக விசாவில் கனடாவிற்கு வரும் நபர்கள் காலாவதி ஆன பின்னர் வெளியேறுகிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது ஒருவர் நாட்டை விட்டு வெளியேறும் போது, அவர்களின் தகவல்கள் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் விசா காலம் முடிந்த பின் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்களா என்பதை தானாக சரிபார்க்கும் முறைமை இல்லையென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையை மாற்றுவதற்காக புதிய கண்காணிப்பு நடைமுறைகள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 2026 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.9 மில்லியன் தற்காலிக விசாக்கள் காலாவதியாகும் என கனேடிய குடிவரவுத் துறை அறிவித்துள்ளது. பல தமிழர்கள் விசிட்டர் விசா உள்ளிட்ட தற்காலிக விசாக்களில் கனடாவிற்கு சென்றுள்ள நிலையில், இந்த புதிய கட்டுப்பாடுகள் அவர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT