மதுபான அனுமதிப்பத்திர மோசடி: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிணையில் விடுதலை

ஒருவருக்கு மதுபான அனுமதிப்பத்திரம் (Liquor License) பெற்றுத் தருவதாகக் கூறி, அவரிடமிருந்து 27.5 மில்லியன் ரூபாயை ( ரூ.2 கோடி 75 லட்சம்) மோசடி செய்ததாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
மதுபான அனுமதிப்பத்திர மோசடி: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிணையில் விடுதலை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திஸாநாயக்க, நிதி மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நிலையில், நுகேகொட நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 50,000 ரூபாய் ரொக்கப் பிணையில் அவரை விடுவிக்க நீதவான் இன்று (15) உத்தரவிட்டார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பிணையில் விடுவிக்கப்பட்ட அதேவேளை, அவர் வெளிநாடு செல்வதைத் தடுத்து நீதிமன்றம் பயணத் தடையும் விதித்துள்ளது.

வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மதுபான அனுமதிப்பத்திரம் (Liquor License) பெற்றுத் தருவதாகக் கூறி, அவரிடமிருந்து 27.5 மில்லியன் ரூபாயை ( ரூ.2 கோடி 75 லட்சம்) மோசடி செய்ததாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் இயங்கும் நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Click for more latest அரசியல் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -