நாளை முதல் மழை அதிகரிக்கும்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (18) முதல் மழை நிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
நாளை முதல் மழை அதிகரிக்கும்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (18) முதல் மழை நிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (17) காலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, ஊவா மாகாணத்திலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தவிர, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலையகத்தின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது 30-40 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் திணைக்களம் பொதுமக்களை கோருகிறது.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -