கடைசி ஓவர் த்ரில்லர் - பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது இலங்கை
சாமரி அதபத்து 48 பந்துகளில் 63 ரன்களும், அனுஷ்கா சஞ்சீவனி 22 பந்தில் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் எடுத்ததன் மூலம், 2024 மகளிர் ஆசியக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் கடைசி ஓவரில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று (26) மோதின.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததுடன், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் முனேபா அலி 37 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் உதேஷிகா பிரபோதினி மற்றும் கவிசா தில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

141 ஓட்டங்களை இலக்காககொண்டு இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய நிலையில், 19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு141 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் சாமரி அத்தப்பத்து 63 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் சாதியா இக்பால் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து, இலங்கை அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
