அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்...

இரண்டு கட்டங்களின் கீழ் மொத்தம் 1,197,728 பயனாளி குடும்பங்களுக்கு 11.16 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்...
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு, இன்று புதன்கிழமை (14) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 985,283 பயனாளி குடும்பங்களுக்கு 9.12 பில்லியன் ரூபாய் தொகையும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,445 பயனாளி குடும்பங்களுக்கு 2.04 பில்லியன் ரூபாய் தொகையும் வைக்கிலிடப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இரண்டு கட்டங்களின் கீழ் மொத்தம் 1,197,728 பயனாளி குடும்பங்களுக்கு 11.16 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

அதன்படி, பயனாளர்கள் இன்று முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக குறித்த பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT