இந்தோனேசியாவில்  எரிமலை வெடித்ததில் 11 பேர் உயிரிழப்பு!

அந்தப் பகுதியிலிருந்து 26 பேர் இன்னும் வெளியேற்றப்படவில்லை என்று மீட்புக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இந்தோனேசியாவில்  எரிமலை வெடித்ததில் 11 பேர் உயிரிழப்பு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் இருக்கும் மெராப்பி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து 11 மலையேறி வாசிகள் உயிரிழந்தனர். 

மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரி ஒருவர் அந்தத் தகவலை தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நேற்று (3 ) அந்த எரிமலை வெடித்ததில் 3,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியானது.

அந்தப் பகுதியிலிருந்து 26 பேர் இன்னும் வெளியேற்றப்படவில்லை என்று மீட்புக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 14 பேரில் 3 பேர் உயிருடன் உள்ளனர். ஏனைய 11 பேரும் சடலங்களாகவே மீட்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த சனிக்கிழமையிலிருந்து அந்த மலைக்கு மொத்தம் 75 மலையேறிகள் சென்றதாகக் கூறப்பட்டது.

அவர்களில் 49 பேர் மலையிலிருந்து கிழே இறங்கிவிட்டதாகவும் 12 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்டவர்களில் சிலருக்கு தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT