பத்தும் நிசங்க அதிரடி சதம்: 2ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷை பதம்பார்த்தது இலங்கை

டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் ஆடிய பங்களாதேஷ் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. 

பத்தும் நிசங்க அதிரடி சதம்: 2ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷை பதம்பார்த்தது இலங்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் நேற்று நடைபெற்றது. 

டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் ஆடிய பங்களாதேஷ் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹிருடோய் 96 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சவுமியா சர்க்கார் 68 ரன்னும், ஷாண்டோ 40 ரன்னும் எடுத்தனர். இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், மதுஷனகா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்க பெர்னாண்டோ டக் அவுட்டானார். குசல் மெண்டிஸ் 16 ரன்னும், சமரவிக்ரம ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட்கள் விழுந்தாலும் பொறுப்புடன் ஆடிய பதும் நிசங்க சதமடித்து அசத்தினார். அவருக்கு அசலங்க நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. அசலங்க அரை சதம் கடந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

4ஆவது விக்கெட்டுக்கு 185 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்க 114 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசலங்க 91 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், இலங்கை 47.1 ஓவரில் 287 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT