அடுத்த 24 மணிநேர வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
அடுத்த 24 மணிநேர வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்துக்கு அமுலில் இருக்கும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்படி, அரபிக் கடல் பகுதியில் செயற்படும் பல நாள் கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, தென்மேற்கு பருவமழை தீவிரமான காலநிலை காரணமாக அரபிக்கடற்பரப்பில் 65-75 கிலோமீற்றர் வேகத்தில் மிக பலமான காற்று வீசக்கூடும் மற்றும் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சப்ரகமுவ மாகாணத்திலும் குருணாகலை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Click for more latest வானிலை & சூழல் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -