நீதிமன்ற வழக்கு பொருட்கள் அறையில் வைக்கப்பட்ட ஹெரோய்ன் திருட்டு

சந்தேநபரை அடையாளம் காண விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரச புலனாய்வுப் பிரிவினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
நீதிமன்ற வழக்கு பொருட்கள் அறையில் வைக்கப்பட்ட ஹெரோய்ன் திருட்டு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த 12 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் காணாமல் போயுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கின் சான்றுப்பொருளான ஹெரோய்ன் கையிருப்பு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் வைக்கப்பட்டிருந்தது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அரச புலனாய்வு சேவை அதிகாரி போன்று தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவர், அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்த 240 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள குறித்த ஹெரோய்ன் போதைப்பொருளை எடுத்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். 

சந்தேநபரை அடையாளம் காண விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரச புலனாய்வுப் பிரிவினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -