மீண்டும் வடக்குக்கான ரயில் சேவைகள் நிறுத்தம்
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கு முன்னெடுக்கப்படும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.
வடக்கு ரயில் பாதையின் மஹவ மற்றும் ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, ஜனவரி 07ஆம் திகதி மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கு இடையிலான வீதி நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றது.
தண்ணீர் என்று நினைத்து இரசாயனத்தை குடித்த மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
இதானால், ஜனவரி 07 ஆம் திகதியிலிருந்து 06 மாத காலத்திற்கு தற்காலிகமாக மஹவ மற்றும் அநுராதபுரத்துக்கு இடையிலான ரயில் சேவைகள் இடம்பெறாது.
இதன்படி, ஜனவரி 07ஆம் திகதி முதல் வடக்கு ரயில் மாரக்கத்தின் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ வரையிலும், காங்கேசன்துறையில் இருந்து அநுராதபுரம் வரையிலும் மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.