நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,  நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (09) சில இடங்களில் மழை பெய்யக் கூடும்

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,  நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (09) சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்று கி.மீ. 40-50 வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Click for more latest வானிலை & சூழல் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -