ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் நுகர்வோருக்கு அநீதி ஏற்படாத வகையில் மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை உயர்வு காரணமாக பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளிலும் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு, நாளை திங்கட்கிழமை (31) கூடவுள்ளது.
பால்மா இறக்குமதி விலை உயர்வு காரணமாக இன்று நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. 400 கிராம் பால்மா பெட்டி 50 ரூபாவும், 1 கிலோ பால்மா 125 ரூபாவும் உயரும். பழைய இருப்புகளுக்கு விலை உயர்வு இல்லை என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுறா மீன் ஒரு கிலோகிராம் 2,500 ரூபாயாகவும் வளையா மீன் ஒரு கிலோகிராம் 1,500 ரூபாயாகவும் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் வைத்து மீனவர்களால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
உணவு பொதி உள்ளிட்ட அனைத்து விதமான உணவு பண்டங்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.