இனங்களுக்கு இடையில் முரண்பாட்டைத் தூண்டிய வழக்கில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட ஒன்பது மாத சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2027ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பிடித்துள்ளன.
இலங்கையின் பொது சுகாதாரத்துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் சுமார் 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இந்தியா விசேட விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது.
தனது தேசிய அடையாளம் கனடா என்றும் கலாசார வேர்கள் ஈழத் தமிழ் என்றும் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் வெளியிட்ட கருத்துக்கள் புலம்பெயர் சமூகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்புப் பெற இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது பெற்றோரிடம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாக்க இலங்கை அரசாங்கம் அவசர சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பைஸர் முஸ்தபா கோரிக்கை விடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரது உயிரைக் காப்பாற்ற உடனடி இராஜதந்திர தலையீட்டை பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளதுடன் பயனாளிகள் நாளையிலிருந்து பணத்தைப் பெறலாம் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது, பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க வர்த்தகர்களுக்குத் தடை விதித்து, நுகர்வோர் விவகார அதிகார சபை கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்ட விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்களைப் பாதுகாக்க முயற்சிப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விமர்சித்துள்ளார்.
ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் நுகர்வோருக்கு அநீதி ஏற்படாத வகையில் மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் கார்களின் மதிப்பு சுமார் 100 மில்லியனிலிருந்து மிக ஆடம்பரமான மாடல்கள் 500 மில்லியன் ரூபாய் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட சோதனைகளுக்குப் பிறகு, அது சாதாரண கட்டி அல்ல, மாறாக ஒரு மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல் என்பது விரிவான மருத்துவ ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.
பிரதமர், அரசாங்கத்தால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம், மாணவர்களின் சாதனைகளை முதன்மையாக பரீட்சைகள் மூலம் மட்டுமே அளவிடும் முறையைத் தாண்டிச் செல்வதாகும் என்று கூறினார்.
சூரிய ஒளியில் நீண்ட நேரம் தங்கியிருப்பது உடல் வெப்பத்தை அதிகரித்து, மனநல ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று அவர் விளக்கியுள்ளார்.
இலங்கையின் சட்டக் கட்டமைப்புக்கு வெளியே இயங்கும் இவ்வாறான அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் சூதாட்டத் தளங்களில் பணத்தை முதலீடு செய்யவோ அல்லது அவற்றைப் பயன்படுத்தவோ வேண்டாம்.