பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமனம்

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமனம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனிடையே, அந்நாடு விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. 

இந்த போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை ஜனாதிபதி முகமது சஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். 
மேலும், இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தளபதிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்த பேச்சுவார்த்தையின்போது நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனிசை இடைக்கால அரசின் தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், பங்களாதேஷில் அமைய உள்ள இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிசை நியமித்து அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT