சாய்ந்தமருது கொலை சம்பவம் - சந்தேக நபர்கள் ஐவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

குறித்த வழக்கு திங்கட்கிழமை(22) கல்முனை நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
சாய்ந்தமருது கொலை சம்பவம் - சந்தேக நபர்கள் ஐவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பாறுக் ஷிஹான்

தனது மாமனாரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருமகனான பிரதான  சந்தேக நபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறித்த வழக்கு திங்கட்கிழமை(22) கல்முனை நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதான சந்தேக நபர் உட்பட ஐவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆந் திகதி வரை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) அதிகாலை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிவேரியன் கிராமம் பிரிவு-09 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட குடும்ப மோதலில் தனது மகளை விவாகரத்து செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக  62 வயதுடய  மீராசாயிப் சின்னராசா என்பவர்  மரணமடைந்திருந்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பின்னர்  அன்றைய தினம் இரவு குறித்த மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான மருமகன் உட்பட  ஐந்து சந்தேக நபர்களை வாழைச்சேனை மற்றும் சாய்ந்தமருது பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்திருந்தனர்.

மேலும் மரணமடைந்தவரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டு விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம்  கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Click for more latest கிழக்கு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -