மழையுடனான வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மழையுடனான வானிலை: மற்ற பகுதிகளில் அவ்வப்போது 30-40 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
மழையுடனான வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மழையுடனான வானிலை 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில்  50 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யலாம்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50-60 கி.மீ பலத்த காற்று வீசும்.

மற்ற பகுதிகளில் அவ்வப்போது 30-40 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும்.

Click for more latest வானிலை & சூழல் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -