சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யும்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 30-40 கி.மீ. வரை காற்று வீசும்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யும்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றருக்கும் அதிக  கனமழை பெய்யக்கூடும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 30-40 கி.மீ. வரை காற்று வீசும்.

இடியுடன் கூடிய மழையுடன் போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, பதுளை, கண்டி, நுவரெலியா, குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest வானிலை & சூழல் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -