பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

ஏனைய பாடசாலைகளுக்கு 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பதுளையில் உள்ள சில பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்காக பதுளை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட பதுளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பதுளை விசாகா பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆகியன 24ஆம் திகதி வரை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், பதுளை விகாரமஹாதேவி மகளிர் உயர்தரப் பாடசாலை மற்றும் பதுளை ஊவா உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு 19 மற்றும் 20 திகதி விடுமுறை வழங்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட மாவட்டத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளுக்கு 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -