அரசாங்கம் வழங்கிய வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

அடுத்த வருடம் முதல் இது தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
அரசாங்கம் வழங்கிய வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நகர்ப்புற வீடுகளின் உரிமையை அதன் குடியிருப்பாளர்களுக்கே வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், அடுத்த வருடம் முதல் இது தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு கூறியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதற்கமைய, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடுகள் அதன் குடியிருப்பாளர்களுக்கே முழுமையாக வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சத்யானந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் உரிமை இவ்வாறு வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய 52000 வீடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், வரவு - செலவுத் திட்ட முன்மொழிவான இந்த வேலைத்திட்டத்தை விரைவாகப் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest இலங்கை news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -