மீன் ஏற்றிச் செல்லும் வண்டி - இ.போ.ச பஸ் விபத்து

விபத்து இடம்பெற்ற வேளை அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததாகவும் வளைந்து செல்லும் பிரதான வீதியில்  சிறிய ரக மீன் ஏற்றிச் செல்லும் வண்டி வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணித்த வேளை இவ்விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
மீன் ஏற்றிச் செல்லும் வண்டி - இ.போ.ச பஸ் விபத்து
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மீன் ஏற்றிச் செல்லும் வண்டி மற்றும் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் ஆகிய மோதியதில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து, இன்று (13) காலை  அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

விபத்தின் போது கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியே அக்கரைப்பற்று பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் மற்றும் மட்டக்களப்பு கல்முனை வீதி வழியாக வந்த சிறிய ரக மீன் ஏற்றிச் செல்லும் வண்டி ஆகியன  இந்த விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளதுடன், இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளது.

இதன்போது இவ்விரு வாகனங்களையும் செலுத்தி சென்ற சாரதிகள் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற வேளை அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததாகவும் வளைந்து செல்லும் பிரதான வீதியில்  சிறிய ரக மீன் ஏற்றிச் செல்லும் வண்டி வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணித்த வேளை இவ்விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

(பாறுக் ஷிஹான்)

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -