புதிய முறையால் கடவுச்சீட்டு அலுவலகம் முன் பரபரப்பு

அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய கடவுச்சீட்டைப் பெற அல்லது புதுப்பிக்க www.immigration.gov.lk இணையத்தளத்தின் மூலம் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
புதிய முறையால் கடவுச்சீட்டு அலுவலகம் முன் பரபரப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19) முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடந்த 17ஆம் திகதி அறிவித்திருந்தது.

அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய கடவுச்சீட்டைப் பெற அல்லது புதுப்பிக்க www.immigration.gov.lk இணையத்தளத்தின் மூலம் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இது ஒரு நாள் சேவை மற்றும் பொது சேவை ஆகிய இரண்டிற்கும் செல்லுபடியாகும்.

இதயும் படிங்க : கடவுச்சீட்டு பெற இன்று முதல் புதிய முறை; முன்பதிவு கட்டாயம்

இவ்வாறானதொரு பின்னணியில் இன்று காலை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வந்திருந்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்போது? குறிப்பிட்ட திகதி மற்றும் நேரத்தில் வந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக நீண்ட வரிசைகளும் நெரிசலும் காணப்பட்டதுடன் பொலிஸாருக்கும் கலகத் தடுப்புப் பிரிவினருக்கும் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -