காத்தான்குடி விபத்தில் 17 வயது மாணவன் உயிரிழப்பு

காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
காத்தான்குடி விபத்தில் 17 வயது மாணவன் உயிரிழப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (27) இரவு கல்முனை - மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை - மட்டக்களப்பு வீதியில் நாவற்குடா பகுதியில் காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த துவிச்சக்கர வண்டி வீதியில் வலப்புறம் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பயணித்த வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

விபத்தில் பலத்த காயமடைந்த பொலன்னறுவை-சுங்காவில பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன்,  மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

வேன் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Click for more latest கிழக்கு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -