பெரும்பாலும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளிலிருந்து பெறப்படுவதாகவும், கப்பல் கட்டணம் மற்றும் தூரம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பிரதான ஆதாரமாக இல்லை என்றும் அவர் விளக்கினார்.
மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் உள்ளிட்டவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்புக்களை வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.