சீரற்ற வானிலை காரணமாக இன்று விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05 ) முதல் வழமைபோல் இயங்கும்.
பெற்றோர்களும் மாணவர்களும் தங்களது பாடசாலைகள் வெளியிடும் அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான doenets.lk தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
பெற்றோர்களும் தமது பிள்ளைகள் பரீட்சை முடிந்த பின்னர் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்யுமாறும், அவர்கள் எவ்வித வன்முறை அல்லது அசாம்பாவிதச் செயற்பாடுகளிலும் ஈடுபடாமல் இருக்க அவதானம் செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், பாடசாலை சீருடைகள் மற்றும் ‘சுரக்ஷா’ காப்புறுதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சீன மக்கள் குடியரசின் முழுமையான அன்பளிப்பாக 11.484 மில்லியன் மீட்டர் அளவிலான சீருடைத் துணிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவை அனைத்தும் தற்போது துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.