வீடு தீப்பிடித்து எரிந்ததில் இளம் பெண் உயிரிழப்பு

19 வயதுடைய புதும்மினி துரஞ்சா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவரது உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
வீடு தீப்பிடித்து எரிந்ததில் இளம் பெண் உயிரிழப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்ததையில் உள்ள வீட்டில் தனியாக இருந்த இளம் பெண், தீக்காயங்களுக்கு உள்ளாகி சந்தேகத்திற்கிடமான நிலையில் உயிரிழந்துள்ளார் என கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.

19 வயதுடைய புதும்மினி துரஞ்சா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவரது உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும், வீட்டின் சொத்து மற்றும் கூரைக்கு சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

யுவதியின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் வெசாக் நிமித்தம் வெளியில் சென்றிருந்த நிலையில், ​​யுவதி தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

கோட்டை, ஸ்ரீ ஜெயவர்தனபுர தீயணைப்புத் துறையின் அதிகாரிகளும், அப்பகுதி மக்களும் விரைந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -