ரயில் நிலைய அதிபரும் உதவியாளரும் போதைப்பொருளுடன் கைது

கம்பஹா - டோபோகொட மற்றும் நீர்கொழும்பு - தெமன்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
ரயில் நிலைய அதிபரும் உதவியாளரும் போதைப்பொருளுடன் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ரயில் நிலைய அதிபரும் ரயில்வே உதவியாளரும் கைதுசெய்யப்பட்டனர் என மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர். 

கம்பஹா - டோபோகொட மற்றும் நீர்கொழும்பு - தெமன்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சந்தேகநபர்களிடம் இருந்து 250 கிராம் 320 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மட்டக்குளி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -