அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா - வெள்ளை மாளிகை அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்து.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா - வெள்ளை மாளிகை அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகளைக் காட்டுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதுதொடர்பான வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், "ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டெலாவேருக்குத் திரும்புவார், அங்கு அவர் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார். அந்த நேரத்தில் தனது அனைத்து கடமைகளையும் முழுமையாகச் செய்வார்" என்று தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதுதொடர்பாக ஜனாதிபதி ஜோபைடன் தனது எக்ஸ் வலைதளத்தில், "இன்று மதியம் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது, நான் தற்போது நன்றாக இருப்பதாக உணர்கிறேன், அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி. நான் குணமடைவதற்காக தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளேன். அந்த நேரத்தில் அமெரிக்க மக்களுக்கான பணியை தொடர்ந்து செய்வேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

81 வயதான பைடன், லாஸ் வேகாசில் நடந்த என்.ஏ.ஏ.சி.பி. தேசிய மாநாட்டில் கலந்து கொண்டநிலையில், நேற்று அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -