கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டு அச்சடிக்கும் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதனால்தான் இந்த தாமதத்தை எதிர்கொள்கின்றதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஒரு மாதத்துக்குள் சுமார் 750,000 கடவுச்சீட்டுக்களை வழங்குமாறு கடவுச்சீட்டு அச்சிடும் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அமைச்சரவையுடனான கலந்துரையாடலின் பின்னர், தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக குறைந்தது 750,000 சாதாரண கடவுச்சீட்டுகளை அச்சிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு அச்சடிக்கும் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதனால்தான் இந்த தாமதத்தை எதிர்கொள்கின்றதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது வரையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நிலைமையை நிர்வகித்து வருகிறதாகவும் ஒரு மாதத்திற்குள் சாதாரண கடவுச்சீட்டுகளை வழங்குமாறு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -