வீடொன்றில் இருந்த நபர் மீது அதிகாலையில் துப்பாக்கிச் சூடு - தப்பியோடிய நபர்கள்

தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
வீடொன்றில் இருந்த நபர் மீது அதிகாலையில் துப்பாக்கிச் சூடு - தப்பியோடிய நபர்கள்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (31) காலை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த நபர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

காயமடைந்தவர் கொக்கல்ல, அம்பலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர்.

தற்போதைய விசாரணையின் படி காயமடைந்த தரப்பினர் வேறு தரப்பினருடன் சிறிது காலமாக இருந்த தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -