தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கி சிறுவன் உயிரிழப்பு! பெற்றோரே அவதானம்!

சிறுவன், ரம்புட்டான் பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது திடீரென சுகயீனமுற்றுள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கி சிறுவன் உயிரிழப்பு! பெற்றோரே அவதானம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹம்பாந்தோட்டை, ஜூலை 8 (நியூஸ்21) - தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கி ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம், ஹம்பாந்தோட்டை, மித்தெனிய பொலிஸ் பிரிவின் ஜுலம்பிட்டிய பகுதியில் நேற்று திங்கட்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சிறுவன், ரம்புட்டான் பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது திடீரென சுகயீனமுற்றுள்ளார்.

இதனை அவதானித்த பெற்றோர், சிறுவனை உடனடியாக கட்டுவான வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

பின்னர் சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -