அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம் தென் மாகாணம், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கடும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம் தென் மாகாணம், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று (02) நண்பகல் 12.30 மணி தொடக்கம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தென் மாகாணம் மற்றும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -