பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் எதிர்காலத்தில் நாடுகடத்தலுக்கு உள்ளாக்கப்படலாம் என உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் காரணமாக, பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பிரித்தானியாவில் அகதிகளின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் இந்த புதிய திட்டத்தை சமீபத்தில் அறிவித்தார்.
திருமண மோதிரங்களைத் தவிர, நகைகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் பிற பெறுமதியான பொருட்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படலாம் என உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
பிரித்தானிய அரசு, அங்கோலா, நமீபியா மற்றும் காங்கோ ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்களுக்கு விரைவில் விசா தடை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.