மதுபோதையில் கொழும்பு - குருநாகல் இ.போ.ச பேருந்தைச் செலுத்திய 58 வயதுடைய சாரதிக்கு 35,000 ரூபா அபராதம் விதித்ததுடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை ஆயுட்காலத்திற்கு இரத்து செய்யுமாறு புதுக்கடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளானது. பேருந்து சாரதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்துள்ளது.