கிரிக்கெட்டை இங்கிலாந்து கண்டுபிடித்தாலும், அதனை 1970களுக்கு பின் ஆட்சி செய்தது வெஸ்ட் இண்டீஸ் தான். வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர்களின் எழுச்சி, விவியன் ரிச்சர்ஸ்-ன் தாக்குதல் பாணி ஆட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
இந்திய அணி வரும் ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது.